DSE - ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை பாடங்களை வீடியோ படப்பதிவு செய்ய ஆசிரியர்களை தெரிவு செய்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, July 18, 2020

DSE - ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை பாடங்களை வீடியோ படப்பதிவு செய்ய ஆசிரியர்களை தெரிவு செய்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.





பள்ளிக் கல்வித் துறையில் , மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக ஏற்கனவே 12 ஆம் வகுப்பு பாடங்களுக்கான வீடியோ படப்பதிவு மேற்கொள்ளப்பட்டு மின் பாடப்பொருளாக மாற்றப்பட்டு பள்ளிகளில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.


இதனைத் தொடர்ந்து , பதினோராம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கான வீடியோ பதிவு மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 9 வகுப்பு வரையிலான பாடப்பொருள்களுக்கான வீடியோ படப்பதிவும் மேற்கொள்ளப்பட உள்ளது . இந்நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கலந்தாலோசித்து கருத்தாளர்களை தெரிவு செய்து படப்பதிவு மேற்கொள்ள ஆவன செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் குறிப்பிட்ட ஒரு ஆசிரியரை அனைத்து அலகுகளுக்கான படப்பதிவினை மேற்கொள்ளச் செய்யாமல் வெவ்வேறு ஆசிரியர்களை பயன்படுத்துதல் வேண்டும். இதற்குரிய பாட ஆசிரியர்களை தெரிவு செய்வதுடன் , அவர்களுக்கு தலைமையாசிரியர்கள் வாயிலாக தகவல் அளித்து , மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆசிரியர்களை அனுப்பி வைத்து பணிகள் தொய்வின்றி நடைபெற , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Post Top Ad