அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 5,000 பேர் மீது நடவடிக்கை - Asiriyar.Net

Sunday, July 26, 2020

அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 5,000 பேர் மீது நடவடிக்கை










அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 5,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை விபரத்தை அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் தொடங்கி தலைமை ஆசிரியர் வரை 5,000 பேர் விதி மீறி உயர்கல்வி பயின்றுள்ளனர்.


கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் முதுகலை படிப்புகள் படிப்பர். அவர்கள் முதுகலை படிப்பை முடிக்கும் போது ஊக்க ஊதியம் வழங்கப்படும். ஒரு உயர் கல்வியை முடித்தால், மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை ஊக்க ஊதியம் கிடைக்கும்.

இந்தநிலையில் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயர்கல்வியை முடித்து இருக்கின்றனர். ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பை பின் தேதியிட்டு ஏற்க முடியாது என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.


துறை அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்தது தவறு என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். துறையின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில், உயர்கல்வி முடித்து பணியாற்றி வரும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Post Top Ad