மாணவர்களே! லேப்டாப் எடுத்துட்டு வாங்க, வீடியோவை பதிவிறக்கம் செய்து படிங்க - பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம். - Asiriyar.Net

Saturday, July 11, 2020

மாணவர்களே! லேப்டாப் எடுத்துட்டு வாங்க, வீடியோவை பதிவிறக்கம் செய்து படிங்க - பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்.


மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள லேப்டாப்களில் பாடங்கள் வீடியோ வடிவில்  பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




கொரோனோ பரவலால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. அதேபோன்று அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச லேப்டாப்களில் மாணவர்களுக்கான பாடங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் வீடியோக்கள் வடிவில் லேப்டாப்புகளில் பதிவேற்றம் செய்து தரப்பட உள்ளது.


10,12-ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15-ஆம் தேதி முதல் விலையில்லா பாடப்புத்தகங்கள்..

முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வீடியோக்கள் மூலம் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கல்வி தொலைக்காட்சி,e-learn.tn schools என்கிற இணையத்தளம் ஆகியவற்றில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.இதற்கு அடுத்த கட்டமாக தற்போது மாணவர்களுக்கு நேரடியாக பாடங்களுக்கான வீடியோக்களை பள்ளிக்கல்வித்துறை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad