தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் பட்டினிப் போராட்டம் - Asiriyar.Net

Post Top Ad


Friday, July 10, 2020

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் பட்டினிப் போராட்டம்இன்று காலை 10மணி முதல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளி ஆசிரியர்களும் அவரவர் இல்லத்தில் இருந்து அறவழியில் ஒருநாள் உண்ணாவிரதத்தினை நடத்திக் கொண்டுள்ளனர்.


கொரோனா ஊரடங்கால் அதிகமான தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் உள்ளனர்.

அவர்களின் துயரினைப் போக்கும் வகையில் ஆசிரியர்கள் தங்களைப் பாதுகாக்க வேண்டி #saveprivateschoolteachers
என்ற வாசகத்தை அனைத்துச் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுக் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அவர்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்குமாறு தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின்( பதிவு எண் :30/2018).

நாமக்கல் மாவட்டம் சார்பில் அம்மாவட்டத்தின் தலைவர் M. ஜெயபால்,செயலாளர்    க. சிவநாதன்  முதன்மை ஆலோசகர் செல்வராஜ் மற்றும் பொருளாளர் நிர்வாகிகள் ஆகியோர் கோரிக்கை வைத்தார்கள்.

அறந்தாங்கிஅறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் பணிபுரியும் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து இன்று ஒரு நாள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மீமிசல் சங்கித் பள்ளி தாளாளர் ஆசிரியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். 

 அதேபோல அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர். சுரேஷ்குமார், அன்னை மீனாட்சி நாச்சியார் பள்ளி தாளாளர் டி.என்.எஸ்.நாகராஜன், ஐடியல் பள்ளி தாளாளர் பி.சேக்சுல்தான் உள்ளிட்ட பல்வேறு பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் ஆசிரியைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூர்தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

 தனியார் ஆசிரியர்களுக்கான நலவாரியம் அமைக்க வேண்டும் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக மாற்ற வேண்டும், நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் தனியார் பள்ளிகளுக்கு எந்தவித நிபந்தனையும் நிர்ப்பந்தமும் இல்லாமல் மூன்று ஆண்டு தொடர் அங்கீகாரம் உடனே வழங்க வேண்டும் கரோனா காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வாழ்வு ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.


 2018-19 ஆண்டுக்கான ஆர் டி இ கல்வி கட்டண பாக்கி 40 சதவிகிதம் மற்றும் 2019-20ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டண பாக்கி 100% உடனே வழங்க வேண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். 

 தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள பட்டினிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

Recommend For You

Post Top Ad