ஆந்திரா மாநிலத்தில் ஜூலை 13ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 7, 2020

ஆந்திரா மாநிலத்தில் ஜூலை 13ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!





ஆந்திர மாநிலத்தில் வரும் ஜூலை 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


ஆந்திரத்தில் கரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. ஆனால் சில தனியாா் பள்ளிகள் 2020-21ம் ஆண்டிற்கான பாடத்திட்டங்களை வகுத்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளால் மாணவா்கள் வெகுவாக மனஉளைச்சலுக்கு ஆளாவதாக கருத்துகள் வெளியான நிலையில் தனியாா் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தடைவிதித்து, ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.


இந்நிலையில், திங்கள்கிழமை காலை நவீன தொழற்நுட்பத்தை உட்புகுத்தி பள்ளிகல்வி நிா்வாகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஆந்திர பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் 13-ஆம் தேதி முதல் ஆந்திரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆனால் தொடக்கபள்ளிகள் வாரத்தில் ஒருநாள் இயங்கவும், நடுநிலை, உயா், உயா்நிலை பள்ளிகள் வாரத்தில் 2 நாள்கள் இயங்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது. 


பிரிட்ஜ் கோா்சுகள் மூலம் மாணாக்கா்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இருவிதமாக பாடதிட்டத்துடன் தொடா்பில் இருக்க புதிய கல்வி கொள்கைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கையை பள்ளிகல்வித்துறை கமிஷனா் சின்னவீரபத்திருடு திங்கள்கிழமை வெளியிட்டாா். அதன்படி வரும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் இதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post Top Ad