9,11 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? முதலமைச்சர் பதில் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 9, 2020

9,11 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? முதலமைச்சர் பதில்




மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு. தேர்வே எழுதாமல் அனைவரும் பாஸ் செய்து விட்டால் அவருடைய தகுதி என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய் விடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா, கால்நடை மருத்துவகல்லூரி அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க வந்துள்ளேன்.டி.என்.பி.எஸ்.சி தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நடைபெற்ற முறைகேடு குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.


தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணியை தேர்வாணையம் செய்து வருகின்றது. தவறில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயதானவர். காலில் சிக்கிய குச்சியை எடுக்க உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார். குனிந்து எடுக்க முடியவில்லை என்பதால் பேரன் வயதில் இருந்த சிறுவனை உதவிக்கு அழைத்தாக அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்

அமைச்சர் அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.இதை ஊடகங்கள் பெரிதாக வெளியிடுவது வருத்தம் அளிக்கின்றது.

வறட்சி என்ற சொல்லே இந்த ஆண்டு இல்லை. நல்ல மழை பெய்து குளங்கள் நிரம்பி இருக்கின்றது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு இருக்கின்றது என தெரியவில்லை. அவர் ஒரு பக்தி மான். அவர் சொந்த கருத்தை சொல்லி இருக்கின்றார். அது அதிமுகவின் கருத்துகிடையாது என்பதையும் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார் என்று கூறினார்.

9,11 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு, 'பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டால் தகுதியை எப்படி நிர்ணயம் செய்ய முடியும். அந்த மாணவர் நமது ஊரில்தான் இருக்க முடியும்

மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு. தேர்வே எழுதாமல் அனைவரும் பாஸ் செய்து விட்டால் அவருடைய தகுதி என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய் விடும்' என்றார்.

இடைநிற்றல் குறித்த புள்ளி விபரங்கள் யாரும் கொடுக்கவில்லை. இடைநிற்றலை தடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது என்றும் முதல்வர் கூறினார்.

Post Top Ad