காகித மடிப்புக்கலை பயில்தல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 22, 2019

காகித மடிப்புக்கலை பயில்தல்




(கலைக்கு அருகில் குழந்தைகள் – நிகழ்வு 1)

குழந்தைகளைப் போலவே கலை வடிவங்களும் பார்க்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் மனதால் அறியும்பொழுதும் உண்மையான மகிழ்ச்சியை வழங்குகிறது. மனிதர்கள் தங்களை நிதானப்படுத்திக்கொண்டே உள்ஒழுங்குகளை அடையும் பாதையாகவும் அது இருக்கிறது. குழந்தைகள் என்று வரும்பொழுது அது கூடுதலாக அவர்களது இயல்போடு துல்லியமாக பொருந்திப்போகிறது, ஒரு விளையாட்டுபோல பாரமின்றி அந்தப் பாதையை அடைய முடிகிறது. எனில் குழந்தைகள் கலையின் திசையில் உயிர்த்திருப்பதும் மலர்வதும் மனிதனாக தன்னை மேலும் உயர்த்திக்கொள்வதும் எளிதில் சாத்தியமாகிறது. பூமிக்கு நல்ல உயிர்களாக குழந்தைகளை பரிசளிக்கின்றன கலைகள்.

அகிரா எனும் ஜப்பானியத் தாத்தாவின் விரல்கள் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் விருப்பத்தோடு பற்றி விளையாடும் விழுதுகள்போல் மாறியிருக்கிறது. அகிரா குழந்தைகளின் மனதை நிறைக்க ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான காகித பொம்மைகளை உருவாக்கிக்கொடுத்தார். ஜப்பானியப் பள்ளிகள் சிறிய குழந்தைகளின் பாடத்திட்டத்தில் ஓரிகாமியை இணைத்து வகுப்பறைகளை குழந்தைகளின் விருப்பத்தை முன்னிலைப்படுத்தி உருவாக்கி இருக்கின்றன. நமது பள்ளிக் கட்டிடங்களும் வீடுகளும் குழந்தைகளின் விருப்பமான மொழியை பேசிப்பழகுவதற்கான ஒரு முயற்சி குழந்தைகளோடு பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து அகிரா தாத்தாவின் பொம்மைகளை செய்துபார்ப்பது,  மேலும் அகிரா தாத்தாபோல் புதிய பொம்மைகளை உருவாக்கிப் பார்ப்பது.

நாள் : 26.05.2019 ஞாயிறு
நேரம் : காலை 10:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை
இடம் : கோவை அக்குபங்சர் அகாடமி, காந்திபுரம், கோயம்புத்தூர்.

(முன்பதிவு அவசியம்)
பங்கேற்பு : 20 நபர்கள் மட்டும்
பங்கேற்புத் தொகை : ரூ. 250/-
பதிவு செய்ய : 98434 72092

குட்டி ஆகாயம்

Post Top Ad