கல்வி நிதி - ஆசிரியர்கள் கவனத்திற்கு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 10, 2019

கல்வி நிதி - ஆசிரியர்கள் கவனத்திற்கு







கல்விக்கான உதவி குறித்து எந்தத் தகவல் கிடைத்தாலும் நண்பர்கள் எனக்கு அனுப்பி விடுகிறார்கள். என்னால் முடிந்தது - ஒவ்வொன்றையும் குறித்து விசாரித்து, சரியான தகவலை மட்டும் பகிர்கிறேன்.

1. அகரம் பவுண்டேஷன் குறித்து ஏற்கெனவே எழுதி விட்டேன்.
அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கும்.
கடந்த ஜனவரி முதலாகவே மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். எனவே, குறைந்த இடங்களே இப்போது உள்ளன.
தொடர்புக்கு - 8056134333 / 9841891000

2. ஆனந்தம் பவுண்டேஷன் 
சென்னையில் உள்ள இந்த அமைப்புடன் பேசினேன். மூன்றாண்டுகளாக உதவி வருவதாகத் தெரிகிறது. பெற்றோர் இல்லாத, சிங்கிள் பேரன்ட் உள்ள, ஆதரவு இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு  உதவி செய்கிறது. விண்ணப்பித்த மாணவர்களை நேரில் பரிசீலித்த பிறகே உதவி தரப்படுகிறது. விண்ணப்பங்கள் அனுப்ப நாளைதான் கடைசி நாள். ஏற்கெனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து விட்டன. ஓரிரு நாள் தாமதம் ஏற்கத்தக்கதே. இந்த ஆண்டுக்கு சுமாராக 120 பேருக்கு உதவ இருக்கிறது. விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரியில் டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து கூரியரில் அனுப்பலாம். 
http://www.anandham.org/downloads/application-2019.pdf

3. மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி
பிஇ படிக்க  4 ஆண்டுகளுக்கும்  இலவசக்கல்வி, இலவச தங்கும் விடுதி,   இலவச பேருந்து வசதி - என்று ஒரு செய்தி சுற்றி வருகிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேசினேன். எல்லாருக்கும் எல்லாமே இலவசம் என்பது தவறான தகவல். பொருளாதாரரீதியாக பின் தங்கியவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என பல்வேறு பிரிவினருக்கும் அவரவருக்கு உரிய வகையில் சில சலுகைகள் வழங்குகிறார்கள். சிலருக்கு முழு கட்டணமும் தள்ளுபடி. சிலருக்கு பாதிக் கட்டணம். சிலருக்கு பஸ் கட்டணம் இலவசம். சிலருக்கு ஹாஸ்டல் கட்டணம் இலவசம். 
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள் 
திருச்சி மெயின் ரோடு,
 M.R.கல்வி நகர் ,
தத்தனூர் அஞ்சல்,
 உடையார்பாளையம் வட்டம் ,
அரியலூர் மாவட்டம் 
9443464046
*
Prerana (Supported by Infosys foundation) என்னும் என்ஜிஓ 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு தேர்வு நடத்தி, முழுக் கல்விக் கட்டணமும் உதவி செய்வதாக ஒரு தகவல் 2017 முதல் சுற்றுகிறது. 
இது பொய்யான தகவல். இன்போசிஸ் பவுண்டேஷன் நிறைய சேவை செய்கிறது. ஆனால் இப்படி இல்லை. பிரேரணா என்பது பெங்களூரில் உள்ள ஓர் அமைப்பு. அதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்தச் செய்தியை யாரும் பகிர வேண்டாம்.

ஷாஜஹான் 
முகநூல் பக்க செய்தி

Post Top Ad