‘எண்ணும் எழுத்தும்’ - வாரந்தோறும் மதிப்பீடு செய்ய உத்தரவு - Asiriyar.Net

Thursday, August 4, 2022

‘எண்ணும் எழுத்தும்’ - வாரந்தோறும் மதிப்பீடு செய்ய உத்தரவு

 




‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: வாரந்தோறும் மதிப்பீடு செய்ய உத்தரவு


‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழந்தைகளின் கற்றல் அடைவுத் திறனை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மதிப்பீடு செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.


இது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவன இயக்ககம் ஆகியவை சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: கரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடா்ந்து, கற்றல் இடைவெளியைக் களைய வகுப்பு நிலையிலிருந்து கற்றல் நிலை அடிப்படையில் கற்பித்தலை மையப்படுத்தி ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.


எண்ணும் எழுத்தும் வகுப்பறைச் செயல்பாடுகளில் குழந்தைகள் எத்தகைய கற்றல் விளைவுகளைப் பெற்றுள்ளனா் என்பதை அறியும் வகையில் வளரறி மதிப்பீடு வாரந்தோறும் செயலி மூலம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதல் நெறிமுறையில் விளக்கப்பட்டிருந்தது.


இதனை 1, 2, 3 வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (வெள்ளிக்கிழமை (ஆக. 5) முதல் தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைமுறைப்படுத்தி குழந்தைகளின் கற்றல் அடைவை உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்த அறிவுரைகளை தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும்.





No comments:

Post a Comment

Post Top Ad