வாட்ஸ்ஆப் நிறுவனம் குரூப்பில் பலவிதமான அம்சங்களை புகுத்திக்கொண்டே இருக்கிறது. அதே போல தற்போதும் குரூப் சம்மந்தப்பட்ட அம்சமான ஒரு அப்டேட்டை வெளியிட இருக்கிறது. தற்போது அந்த அப்டேட் குறித்தான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் அவ்வப்போது புதுவிதமான அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் எக்கச்சக்கமான அப்டேட்களை வெளியிட்டுவிட்டது. மேலும், வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் விவரங்களை பாதுகாப்பாக வைப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இதனால், பில்லியன் கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பயனர்களின் வசதிக்காக பல அப்டேட்காளை வெளியிட்டபடியே இருந்து வருகிறது.
தற்போதைக்கு வாட்ஸ்ஆப் குரூப்பில் தேவையில்லாத செய்தியை பரப்பினால் அதனை குரூப் அட்மின் நீக்கம் செய்யும்படியான அப்டேட்டை வழங்கியுள்ளது. மேலும், வாட்ஸ்ஆப் குரூப்பில் இருந்து சத்தமில்லாமல் வெளியேறிக்கொள்ளும்படியான அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அடுத்தபடியாக யார் யாரெல்லாம் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்துகொள்ளும்படியான அப்டேட்டும் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், அடுத்த அப்டேட் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை. அதாவது, பலர் அடங்கிய ஆபீஸ் குரூப் என்று எடுத்துக்கொண்டால் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரியாது. இதனை கண்டுபிடிக்கும் விதமாக பயனர்களின் சுய விவரங்களை மற்ற குரூப் பயனர் அறிந்துகொள்ளும்படியான அப்டேட் கூடிய விரைவில் வர இருக்கிறது.
No comments:
Post a Comment