G.O 220 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - ஆசிரியர்கள் தேர்வு - புதிய நடைமுறைகள் வெளியீடு - Asiriyar.Net

Monday, August 8, 2022

G.O 220 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - ஆசிரியர்கள் தேர்வு - புதிய நடைமுறைகள் வெளியீடு

 




டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டது. 38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறினார். ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் CEO தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  


இந்தாண்டு நல்லாசிரியர் தேசிய விருதுக்கு ஆசிரியர்களை பரிந்துரை செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இந்தாண்டு 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய மாவட்ட, மாநில அளிவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்; கற்றல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


Click Here to Download - G.O 220 - Radha Krishnan Award - Guidelines - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad