அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்திலும் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்துகொள்ளலாம் என தமிழக முதல்வருக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கரோனா கொடுந்தொற்று கட்டுக்குள் கொண்டு வர உழைத்துவரும் தமிழக முதல்வரை எங்கள் கூட்டமைப்பு பாராட்டுகிறது. முதல்வர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய கேட்டுக்கொண்டோம் அதையேற்று மே மாதம் ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது
மேலும் தொடர்ந்து கரோனா பணிக்கு நிதி தேவைப்படுவதை அறிகிறோம். ஆதலால் முன்கள பணியாளர்களை தவிர்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து முதல்வரின் நிவாரண நிதிக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அருணன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment