தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாநில கல்வித்திட்ட பிளஸ் 2 தேர்வு பற்றி ஆலோசனை நடக்க உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதல்-அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ் நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
No comments:
Post a Comment