மின்கட்டணம் செலுத்த ஜூன் 6 வரை அவகாசம் நீட்டிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 18, 2020

மின்கட்டணம் செலுத்த ஜூன் 6 வரை அவகாசம் நீட்டிப்பு
ஊரடங்கு காரணமாக, மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 - ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் வரை, அவகாசம் வழங்கக்கோரி, தொடர்ந்திருந்த வழக்கு, நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கடந்த 5 ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மே 18-ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அர சுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனை ஏற்று, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Post Top Ad