அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துறையின் அடுத்த அதிரடிl - Asiriyar.Net

Thursday, September 19, 2019

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துறையின் அடுத்த அதிரடிl



அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இனி கிராமங்களுக்கு சென்று அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ், அங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்து போட்டிக்கு தயார்படுத்த வேண்டும் மற்றும் இதற்காக அவர்கள் ஊராட்சியில் உள்ள  புறம்போக்கு இடங்களை அறிந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக கோவை கல்வி அலுவலர் முருகன் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

  இது உடற்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியும் மற்றும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், இவர்கள் வெளி பயிற்சிக்கு சென்றால், அரசு பள்ளி மாணவர்களுக்கு யார் விளையாட்டு பயிற்சி அளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.



Post Top Ad