JIO FIBER சேவை தொடக்கம் - ஒரே இணைப்பில் கேபிள் டிவி, தொலைபேசி, இணையதள சேவைகள் - Asiriyar.Net

Saturday, September 7, 2019

JIO FIBER சேவை தொடக்கம் - ஒரே இணைப்பில் கேபிள் டிவி, தொலைபேசி, இணையதள சேவைகள்





முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அதிவேக ஃபைபர் நெட் சேவையை தொடங்கியுள்ளது. கேபிள் டிவி, தொலைபேசி, இணையதளம் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்த சேவையை கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சோதனை அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வந்தது.





இந்த நிலையில் தற்போது வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இணையதள இணைப்பு மற்றும் பொழுதுபோக்கு துறையில் பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவையை பெறுவதற்காக ஒரு கோடி பேருக்கும் மேல் முன்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad