ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை-அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Saturday, September 7, 2019

ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை-அமைச்சர் செங்கோட்டையன்



ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.


ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,டெட் தேர்வில் தேர்வாகாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள 1,500 ஆசிரியர்களை அரசு கருணை உள்ளத்தோடு பாதுகாக்கும்,

ஆசிரியர்கள் வேலைநாட்களில் போராட கூடாது என்பது அரசின் வேண்டுகோள் ஏனெனில் பாடத்திட்டத்தை நடத்த 240 நாட்கள் தேவைப்படுகிறது.ஆசிரியர்கள் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

Post Top Ad