மாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 17, 2019

மாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு




மாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தியை. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் அறிவித்துளளார். இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


வங்கயில் பிக்செட் டெபாசிட்டில் போடும் பணத்திற்கு கூட பெரிய அளவில் வட்டி விகிதம் கிடையாது. ஏன் அரசின் மற்ற எல்லா திட்டங்களையும் விட தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்திற்கு தான் வட்டி அதிகம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை மேலும் 10 பைசா உயர்த்த தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்து இருந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் நிதியமைச்சம் எதிர்ப்பு தெரிவித்தது.


இதனால் தொழிலாளர் அமைச்சகம் மற்றும் நிதியமைச்சகம் இடையே இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக 46 மில்லியன் சந்தாதாரர்களுக்கு உயர்த்தினாலும் உபரி நிதி இருக்கும் என்றுவிளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து விவாகரம் முடிவுக்கு வந்தது.



இதையடுத்து இன்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் டெல்லியில் நிகழ்ச்சியி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசுகையில். "6 கோடிக்கும் அதிகமான இபிஎப்ஒ சந்தாதார்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக இந்த நிதி ஆண்டில் உயர்த்தப்படுகிறது. பண்டிகைகள் நெருங்கும் வேளையில், 6 கோடிக்கு மேற்பட்ட இபிஎப்ஒ சந்தாதாரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கும் 8.65 சதவீத வட்டி கிடைக்கும்" என்றார்.

முன்னதாக சேமிக்கப்பட்ட பிஃஎப் பணத்தை திரும்ப பெறும் போது 8.55 சதவீதம் வட்டி அளிக்கும் முடிவினை கடந்த 2017-2018ம் ஆண்டு எடுக்கப்பட்டு இருந்தது.

Post Top Ad