பேய் மழை பெய்யப்போகும் மாவட்டங்கள்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...! - Asiriyar.Net

Tuesday, September 17, 2019

பேய் மழை பெய்யப்போகும் மாவட்டங்கள்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!




தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பாக சிவகங்கை காஞ்சிபுரம் வேலூர் ராமநாதபுரம் விருதுநகர் தூத்துக்குடி திருவாரூர் தஞ்சாவூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்கள்

அடுத்து வரும் 2 நாட்களுக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post Top Ad