பள்ளிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே (முன்கூட்டியே) கோடை விடுமுறை அளிக்கத் திட்டமா..?? - Asiriyar.Net

Monday, September 16, 2019

பள்ளிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே (முன்கூட்டியே) கோடை விடுமுறை அளிக்கத் திட்டமா..??


தமிழ்நாட்டில் முதல் பருவத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வழக்கம் போல இத்தேர்வுகள் 23/09/2019 முடிவடைந்து 24/09/2019 லிருந்து முதல் பருவ விடுமுறை தொடங்கி அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்றோடு முடிவடைந்து 03/10/2019 மீண்டும் பள்ளிகள் திறக்கப் படுவது வழக்கம்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக தற்போது மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு தேர்வுகள் முடிந்த மறுநாளிலிருந்து மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடத்த வேண்டும் என்று மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின்  செயல்முறைகள் வெளியாகி உள்ளது.

 இது ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் முதல்பருவத் தேர்வு விடுமுறை ரத்தா..?
என்று குழப்பமான பல கேள்விகள் எழுந்த நிலையில் ஆண்டுக்கு 210 நாட்கள் தான்  வேலை நாட்கள் எனும் போது போட்டிகள் நடைபெற பள்ளிகள் திறந்திருந்தால் வேலை நாட்களாக கணக்கிடப் படும் என்றே தெரிகிறது.

   எனவே காலாண்டுத் தேர்வு விடுமுறையை ரத்து செய்து விட்டு அந்த வேலை நாட்களை கணக்கிட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை வழக்கத்துக்கு மாறாக ஏப்ரல் முதல் வாரத்திலேயே அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad