
ICT தேசிய விருதாளருமான
திரு.ஞா.செல்வக்குமார் அவர்கள் கற்றல் கற்பித்தலில் நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி ஊரகப் பகுதி மாணவர்களின் கையருகே கணினி தொழிற்நுட்பத்தை கொண்டு சென்றதால்
பள்ளியின் மாணவர் சேர்க்கை 2013-14 முதல் இக்கல்வியாண்டு வரை படிப்படியாக உயர்ந்துள்ளமைக்கும் அரசுப்பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு மேலாக உயர்த்தியுள்ளமைக்கும் திரைப்படக் கலைஞர் திரு.சிவகுமார் அவர்களின் கல்வி அறக்கட்டளை சார்பாகவும்
நடிகரும் சமூக சிந்தனையாளருமான திரு.R.S.சூர்யா அவர்களின்
அகரம் பவுண்டேஷனும் இணைந்து சிறந்த ஆசிரியருக்கான பாராட்டுச் சான்றிதழை
திரு.சிவகுமார் திரு.சூரியா திரு.கார்த்தி ஆகியோர் இணைந்து வழங்கினர்.

மகிழ்வுடன் பகிர்கிறோம். கடந்த 2013 ஆம் கல்வி ஆண்டு முதல் 2019 ஆம் கல்வி ஆண்டு இன்றைய நாள் வரை எங்கள் பள்ளியின் மாணவர் சேர்க்கை வரைபடம். ஒவ்வொரு வருடமும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்ய எங்கள் பள்ளி த.ஆசிரியர் , ஆசிரியர்கள் செய்த முயற்சிகள் ஏராளம். அதில் எத்தனையோ இன்னல்கள் துயரங்களை எங்கள் பள்ளி கடந்து வந்துள்ளது. முதலில் பெற்றோர்களுக்கு பள்ளியின் மீது நம்பிக்கை வர வேண்டும் அதற்கு ஏற்றது போல் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும், அதையும் தாண்டி ஊர் பெரியோர்களின் அரவணைப்பும் இருக்க வேண்டும். அப்படி இருந்துவிட்டால் ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். பெற்றோர்கள் எங்கள் பள்ளியின் மீது கொண்ட நம்பிக்கையை என்றும் காப்பது எங்கள் கடமை, எங்கள் பள்ளியின் மீது நம்பிக்கை வைத்த பெற்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் பள்ளியின் வளர்ச்சிக்கு பல உதவிகளை செய்த நல் உள்ளங்களுக்கும் இனிவரும் காலங்களில் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவி செய்ய காத்திருக்கும் ஆன்றோர்களுக்கும் எங்கள் பள்ளியின் சார்பிலும் கிராமத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகள். என்றும் மாணவர் நலனில்
ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்.
பாராட்டு பெற்றுள்ள திரு.ஞா.செல்வகுமார் அவர்களுக்கு www. Asiriyar.net சார்பில் வாழ்த்துக்கள்!!