7th PAY COMMISSION - அரசு ஊழியர்களுக்கு HRA - வீட்டு வாடகைப்படி உயர்கிறது - Asiriyar.Net

Saturday, July 27, 2019

7th PAY COMMISSION - அரசு ஊழியர்களுக்கு HRA - வீட்டு வாடகைப்படி உயர்கிறது



7 வது சம்பள கமிஷன் அடிப்படையில், நகரங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப , அங்கு வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி அதிகரிக்கப்பட உள்ளது.  மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் பலன் அளிப்பது, வீட்டு வாடகைப்படியாகும். தற்போது, ஒரு நகரம், மக்கள் தொகை அடிப்படையில் தரம் உயர்த்தப்படும் போது, அங்கு வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் வீட்டு வாடகைப்படி அதிகரிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது

.

3 பிரிவுகள்

இது தொடர்பாக அகில இந்திய ஆடிட் மற்றும் அக்கவுண்ட் அமைப்பின் துணை பொது செயலர் ஹரிசங்கர் திவாரி கூறியதாவது: தற்போது, மத்திய அரசு 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்திய பிறகு, வீட்டு வாடகைப்படியை மறு ஆய்வு செய்துள்ளது. அப்போது, வாடகைப்படியை எக்ஸ், ஓய், இசட் என 3 பிரிவுகளின் கீழ் வழங்க முடிவு செய்யப்பட்டது.
50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரம் 'எக்ஸ்' பிரிவில் வரும். இங்கு வசிக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மாதம் 24 சதவீதம் வீட்டு வாடகைப்படி பெறுவார்கள். 5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரம் ஓய் பிரிவில் வரும். இந்த பிரிவில் வரும் நகரங்களில் வசிக்கும் ஊழியர்கள் 16 சதவீதமும், இசட் பிரிவில் வரும் நகரங்களில் வசிக்கும் ஊழியர்கள் 8 சதவீத வீட்டு வாடகைப்படியும் பெறுவார்கள். 2011 மக்கள் தொகை அடிப்படையில், இந்த பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.


சுற்றறிக்கை


மக்கள் தொகைக்கு ஏற்ப நகரங்கள் தரம் உயர்த்தப்படும் போது, அங்கு வசிக்கும் ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியை அதிகரிக்க வேண்டும் என நிதி அமைச்சகம் கூறியுள்ளது. மத்திய அரசின் அமைப்புகள் அடிப்படையில், நகரங்கள் தரம் உயர்த்தப்படும் எனவும் கூறியுள்ளது. 

Post Top Ad