2,400 புதிய ஆசிரியர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி - Asiriyar.Net

Tuesday, July 30, 2019

2,400 புதிய ஆசிரியர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி''தமிழகத்தில், 2,400 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

வேலுார், சத்துவாச்சாரியில், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 1,248 பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுவது, தவறு. பள்ளிக்கல்வித் துறை மூலம், மாணவ - மாணவியருக்கு காலணி வழங்கும் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். அதற்கு பதிலாக, 70 லட்சம் பேருக்கு, சாக்ஸ் மற்றும் ஷூ வழங்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.நடப்பாண்டில், 1 லட்சத்து, 68 ஆயிரத்து, 414 மாணவ - மாணவியர், அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 

கடந்த கல்வியாண்டை விட, சேர்க்கை சதவீதம் கூடுதலாகி உள்ளது. தற்போது, 2,400 ஆசிரியர் பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. விரைவில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

Post Top Ad