
11, 12 ஆம் வகுப்புகளுக்கு இலவச லேப்டாப் வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
11, 12 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி இணையதளம்,QR Code பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுப்பதற்கு ஏற்ற வகையில், 11,12 ஆம் வகுப்பு அறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இலவச லேப்டாப் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு பாடம் சொல்லி தருவதற்கு மட்டுமே ஆசிரியர்கள் லேப்டாப் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.