போதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், ஆசிரியர் கார்த்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - Asiriyar.Net

Sunday, July 14, 2019

போதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், ஆசிரியர் கார்த்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


போதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, சி.இ.ஓ., உத்தரவிட்டார்.வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த, அரவட்லா மலைகிராமம் பாஸ்மார்பெண்டாவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு, 120 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக பாரதி அம்பேத்கார், 45, ஆசிரியர்கள் தினகரன், 46, செந்தில்குமார், 48, ஏகநாதன், 51, ஆகியோர் பணிபுரிகின்றனர். இதில் தலைமை ஆசிரியர் பாரதி அம்பேத்கார், ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர், தினமும், மது குடித்து விட்டு, போதையில் பள்ளிக்கு வருவதாக புகார்கள் வந்தன. வாணியம்பாடி கல்வி அலுவலர் லதா நடத்திய விசாரணையில் போதையில் வருவது உறுதியானது.

இதையடுத்து இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, சி.இ.ஓ., மார்ஸ் உத்தரவிட்டார். அவர்கள் இருவரும் அந்தப் பள்ளியில் இருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

Post Top Ad