Flash News : TET தேர்வு காரணமாக ஜூன் 8 அன்று நடக்க இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு - Asiriyar.Net

Friday, May 17, 2019

Flash News : TET தேர்வு காரணமாக ஜூன் 8 அன்று நடக்க இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு


ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட் தேர்வு ஜூன் 13-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.  இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணியாற்ற டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1-5ம் வகுப்பு வரையும் 2ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6-8ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும்.

ஜூன் 8-ஆம் தேதி முதல் தாளும், ஜூன் 9-ஆம் தேதி 2-ஆம் தாளும் நடைபெறும் என்றும், தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிஎட் படித்து கொண்டிருக்கும் மாணவர்களும் முதல் தாள் எழுதலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் நடைபெறும் அதே நாளில் பிஎட் தேர்வும் நடைபெற இருந்தது. இதனால் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.  இந்நிலையில் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட் தேர்வு ஜூன் 13-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 

Post Top Ad