ஜூன் 23-இல் கணினி ஆசிரியர் போட்டித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. - Asiriyar.Net

Tuesday, May 21, 2019

ஜூன் 23-இல் கணினி ஆசிரியர் போட்டித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் போட்டித் தேர்வு வரும் ஜூன் 23-ஆம் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என தமிழக பள்ளிக் கல்வி துறை அண்மையில் அரசாணை வெளியிட்டது.

இதைப் பின்பற்றி, 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.கடந்த மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிட்டது. இந்தப் பதவிக்கு, ஆன்லைன் வழி கணினி தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் பங்கேற்க தேர்வர்கள் கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல், ஏப்ரல் 10-ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், இந்தப் பணியிடத்துக்கான போட்டித்தேர்வு வரும் ஜூன் 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது

Post Top Ad