இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம்?? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 2, 2022

இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம்??

 




இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்


மீண்டும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பணியிடத்தைக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது.


இன்று, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தனர்.


அப்போது,மேலும், முந்தைய காலங்களில் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அமைப்பின் போராட்டங்களுக்கு ஆதரவளித்தற்கும், தமிழக முதலமைச்சராக பதவி யேற்ற பின்பு அமைப்பின் சில கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதை அடுத்து, ஆசிரியர்கள்- பணியாளர்கள் தொடர்பான 12 அம்ச கோரிக்கைகளை முடிவமைச்சரிடம் வழங்கினர். 1.4.2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஒய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.


1.1.2022 முதல் மத்திய அரசு வழங்கியுள்ள 3 சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு வழங்கிட வேண்டும்.


முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பிளை வழங்கிட வேண்டும்.


இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.


முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு (CAS) உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.


சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும். 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.


அரசாணை எண் 56ல் இளைஞர்களின் வேலைவாய்ப்பினைப் பறிக்கிற வகையில் பகுப்பாய்வு குழு அமைக்கப்பட்டு, அக்குழு அரசிடம் அளித்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.


முந்தைய அரசினால் உருவாக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை ஆணையரின் பணியிடத்தினை நீக்கிவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி பதவி மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்படும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பணியிடத்தினை கொண்டு வர வேண்டும். பள்ளிக்கல்வித் துறையில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்களின் நலன்களைப் பாதிக்கும் அரசாணை 101 மற்றும் 108 உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.


அங்கன்வாடி மையங்களில் LKG / UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.





Post Top Ad