இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே சுகர் டெஸ்ட் பண்ணுங்க! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 23, 2022

இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே சுகர் டெஸ்ட் பண்ணுங்க!

 
ப்ரீ டயாபடீஸ் நீரிழிவு என்பது, ரத்தத்தில் சர்க்கரை அளவு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதை காட்டுகிறது. இதை, டைப் 2 நீரிழிவு நோய் என வகைப்படுத்த முடியாது.


வாழ்க்கை முறையில் மாற்றம் கொள்ளாமலே, ப்ரீ டயாபடீஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியவர் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளது.


ப்ரீ டயாபடீஸ் அறிகுறிகளை கண்டறிவது கடினம். அமெரிக்காவில் 20 வயதுக்கு மேற்பட்ட 85 மில்லியன் பேருக்கு, ப்ரீடியாபயாட்டீஸ் பாதிப்பு உள்ளது. இது, நீண்ட கால பாதிப்பையும் ஏற்படுத்தும்.


 உதாரணமாக, இதயம், ரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரகங்களுக்கு நீரிழிவு நோயின் நீண்டகால பாதிப்பு தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதன் முக்கிய அறிகுறிகளை கீழே காணலாம்


 *கருமையான தோல்


ப்ரீ டயாபடீஸ் அறிகுறிகள் உங்கள் தோலில் தோன்றலாம். நீரிழிவு டெர்மோபதி என்பது தோலில் குறிப்பாக கால்களுக்கு முன்னால் உள்ள சிறிய பிரவுனிஷ் புள்ளிகளை குறிக்கிறது.


 சருமத்திற்கான ரத்த ஓட்டம் குறைவதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கழுத்து, அக்குள் மற்றும் இடுப்பு ஆகியவை அடங்கும்.


 *பசி மற்றும் சோர்வு


உடல் நாம் உண்ணும் உணவை குளுக்கோஸாக மாற்றி, அதனை செல்களின் ஆற்றலுக்கு பயன்படுத்துகிறது. ஆனால் நமது செல்கள் குளுக்கோஸை எடுத்துக் கொள்ள இன்சுலின் தேவை. 


உங்கள் உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யவில்லை என்றாலோ அல்லது செல்களின் உடல் இன்சுலினை எடுத்துக்கொள்வதை தடுத்தாலோ, உங்களுக்கு ஆற்றல் கிடைக்காது. 


நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போகலாம். 


இது வழக்கத்தை விட அதிக பசியையும் சோர்வையும் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.


 *அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம்


வழக்கமாக ஒரு நாளைக்கு நான்கு முதல் ஏழு முறை சிறுநீர் கழிக்க வேண்டும்.


 ஆனால், நீரிழிவு அல்லது ப்ரீ டயாபடீஸ் நோய் பாதிப்பு உள்ளவர்கள், அதிகமான செல்ல வாய்ப்புள்ளது.


நமது உடல் சிறுநீரகங்கள் வழியாக குளுக்கோஸை மீண்டும் உறிஞ்சுகிறது, ஆனால் நீரிழிவு நமது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் போது, சிறுநீரகங்களால் அதை மீண்டும் கொண்டு வர முடியாமல் போகலாம். இதனால் உடலில் அதிக சிறுநீர் வெளியேறக்கூடும். 


அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அதிக தாகம் ஏற்படும். நீங்கள் அதிகமாக குடிக்கும்போது,அதிகமாக சிறுநீர் கழிப்பீர்கள்.


 *ட்ரை வாய்


ட்ரை வாய், ஜெரோஸ்டோமியா என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, உங்க வாய் பகுதியில் சுத்தமாக ஈரப்பதம் இருக்காது. 


உடல் சிறுநீர் தயாரிக்க திரவங்களைப் பயன்படுத்துவதால், மற்ற விஷயங்களுக்கு குறைவான ஈரப்பதம் உள்ளது. 


இது, உடலில் நீரிழப்புக்கு ஏற்படலாம். போதுமான உமிழ்நீர் இல்லாததால் உங்கள் வாய் வறண்டு போகலாம்


உங்களுக்கு வறண்ட வாய் அல்லது ப்ரீடியாபயாட்டீஸ் இருக்கலாம் என்று நினைத்தால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். 


உயர் ரத்த சர்க்கரை மற்றும் வறண்ட வாய் ஆகியவை சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கடுமையான பல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.Post Top Ad