ஆசிரியர் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படுமா? - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, September 1, 2020

ஆசிரியர் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படுமா?


*கோவை மாவட்ட அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை, பதவி உயர்வு வாயிலாக நிரப்ப, விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்; அப்போதுதான் பள்ளிகள் திறந்த பின், கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.*
*அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் மே மாத இறுதியில், பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.ஜூன் இறுதிக்குள், பதவி உயர்வு, பணியிட மாறுதல் பெற்றவர்கள், அந்தந்த புதிய பள்ளிகளுக்கு சென்று பணியில் சேர வேண்டும்**ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள இச்சூழலில், வரும் செப்., இறுதி வரை, மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.* ஆனால், கலந்தாய்வு நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.*


*மத்வராயபுரம், தொண்டாமுத்துார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குறிச்சி, தடாகம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கிணறு உட்பட, 20க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

*இதேபோல், பாடவாரியாக, 35 முதுகலை பட்டதாரி ஆசிரியர் இடங்களும் காலியாக உள்ளன.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம் கூறியதாவது:மே மாதத்துக்கு பின், பணி ஓய்வு பெற்றவர்களுக்கே, ஓராண்டு நீட்டித்து பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.*

 *மார்ச், ஏப்ரல் மாதங்களில் பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில், சமீபத்தில் தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. அது போல், பிற மாவட்டங்களிலும், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தலாம். பள்ளிகள் திறந்த பின் கற்பித்தல் பணிகளில் மட்டும், ஆசிரியர்கள் கவனம் செலுத்த,* *இது வசதியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆன்லைன் வாயிலாக, சமூக இடைவெளியை பின்பற்றி, பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மட்டுமாவது நடத்த வேண்டும்;* 

முதுகலை பட்டதாரி, தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பினால் தான், சேர்க்கை, கற்பித்தல் பணிகள் தேக்கமின்றி நடக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.கவனத்தில் கொள்ளுமா, நம் பள்ளிக்கல்வித்துறை?''சென்னை மாநகராட்சி சார்பில், சமீபத்தில் தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.* 
*அது போல், பிற மாவட்டங்களிலும், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தலாம்.*

 *பள்ளிகள் திறந்த பின் கற்பித்தல் பணிகளில் மட்டும், ஆசிரியர்கள் கவனம் செலுத்த, இது வசதியாக இருக்கும்,''ஆன்லைன் வாயிலாக, சமூக இடைவெளியை பின்பற்றி, பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மட்டுமாவது நடத்த வேண்டும்;*

 *முதுகலை பட்டதாரி, தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பினால் தான், சேர்க்கை, கற்பித்தல் பணிகள் தேக்கமின்றி நடக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.*

Recommend For You

Post Top Ad