தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சேர எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? - Asiriyar.Net

Post Top Ad


Monday, July 20, 2020

தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சேர எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?


தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சேர எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது வரை மூடப்பட்டு உள்ளது.

இதனிடையில் தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு இணையத்தளம் வாயிலாக ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் மாணவர்கள் www.tngasa.in மற்றும் www.dceonline.org என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஜூலை 25 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மாணவர்கள் இணையத்தளம் வாயிலாக சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்றும் பொதுப்பிரிவினர் 50 ரூபாய் விண்ணப்ப கட்டணம் 

செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Recommend For You

Post Top Ad