இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ? - Asiriyar.Net

Post Top Ad


Friday, April 17, 2020

இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?


மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள் உள்ளன. 27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் அடங்கியுள்ளன. ஒருவர் சிறந்த படிப்பாளியாக இருப்பார், சிலர் புத்திசாலிகளாக இருப்பார்கள். சிலர் சிறந்த பேச்சாளர்களார்களாக இருப்பார்கள். சிலர் அழகாகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சில குறிப்பிட்ட ராசி நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் தொடர்ந்து வரும்.

நாம் பிறக்கும் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே அந்த ஜாதகருடைய ஜன்ம ராசி எனப்படும். உங்கள் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுதான் உங்களின் ஜனன ராசி. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சரிப்பார். நட்சத்திரங்கள் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்பது நட்சத்திர பாதங்கள் ஒரு ராசிக்கு உண்டு. மொத்தம் 12 ராசிகளிலும் சேர்த்து 108 நட்சத்திர பாதங்கள் உள்ளன.

ஒவ்வொரு ராசிகள், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் சில குணாதிசயங்கள் உள்ளன. 12 ராசிகளில் பிறந்தவர்களின் குணங்களையும் அவர்களின் நிறம், மனம், திடம், பெர்சனாலிட்டி எப்படி என்று பார்க்கலாம்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
மேஷம்
மேஷம் ராசியில் பிறந்தவர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் திடமானவர்கள். கோபம் அதிகம் வரும் கொஞ்சம் முரட்டு சுபாவம் இருக்கும். மேன்மையானவர்கள் மென்மையானவர்களும் கூட, நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பார்கள். செல்வாக்கும் சொல்வாக்கும் கொண்டவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.


இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
ரிஷபம்

ரிஷபத்தில் பிறந்தவர்கள் தாராள குணம் கொண்டவர்கள். பக்தியானவர்கள், உடல் பருத்தவர்கள், சற்றே மந்த குணம் இருக்கும். செல்வம் அதிகம் சேரும். அன்பாக இருந்தாலும் சிக்கனமானவர்கள். புளிப்பு காரம் அதிகம் சாப்பிடுவார்கள். வசதியும் செல்வாக்கும் கொண்டவர்கள். வேடிக்கையாக பேசுவார்கள். வாழும் வரைக்கும் வசதியாகவே வாழ்வார்கள்.


இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
மிதுனம்

மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் சாமர்த்தியமாக பேசும் வல்லமை படைத்தவர்கள். காரியவாதிகள் சிரிக்க சிரிக்க பேசுவார்கள். தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள். புகழும் கீர்த்தியும் கொண்டவர்கள். சுயநலம் கொண்டவர்கள். எழுத்து கலைத்தறையில் ஆர்வம் கொண்டவர்கள். தைரியசாலிகள் தொழிலில் தைரியமாக இருப்பார்கள். தங்களின் திறமையினால் முன்னேறுவார்கள். சராசரியாக 70 வயது வரை வாழ்வார்கள்.


இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
கடகம்

கடகம் ராசிக்காரர்கள் நல்ல நினைவாற்றல் கொண்டவர்கள். கற்பனையும் வீரமும் விவேகமும் கொண்டவர்கள். அதே நேரத்தில் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவார்கள். இரக்க சுபாவம் கொண்டவர்கள். கூச்ச சுபாவம் கொண்டவர்கள். உடல் தைரியம் இல்லாதவர்கள் அதே நேரத்தில் மன தைரியம் கொண்டவர்கள். கோபம் தொட்டதிற்கெல்லாம் வரும். மனம் ஒரு நிலையில் இருக்காது.


இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் தைரியமானவர்கள், சூரியனைப் போல தலைமைப்பண்பு கொண்டவர்கள். சிறந்த படிப்பாளிகள், புகழும் கீர்த்தியும் கொண்டவர்கள். சாப்பாடுதான் மெயின் அதற்குப் பிறகுதான் எல்லாமே. நோய் வந்தாலும் விரைவில் குணமாகும். சுகவாசிகள்,ஆயுளும் ஆரோக்கியமும் கொண்டவர்கள். தலைமை பதவியில்தான் இருப்பார்கள்.இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தெய்வீக நம்பிக்கை கொண்டவர்கள். சமூக சேவைகளில் பிரியம் கொண்டவர்கள். தெய்வீக வழிபாடுகளில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். சொந்த பந்தங்களுடன் கூடியிருப்பார்கள். தான தர்மங்கள் செய்வார்கள். அன்பானவர்கள் சிறந்த பேச்சாளிகள்.


இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் செல்வம் செல்வாக்கு கொண்டவர்கள். சொத்து சுகம் என சுகவாசிகளாய் வாழ்வார்கள். செல்வாக்குடன் உயர்பதவியும் கொண்டவர்கள். காதலும் ரொமான்ஸ் உணர்வும் அதிகம் இருக்கும். சிறந்த வியாபாரிகள். சுகம் சவுகரியங்களுடன் நீண்ட நாட்கள் வாழ்வார்கள்.


இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ரொம்ப சுறுசுறுப்பானவர்கள். படிப்படியாக முன்னு வருவார்கள். தைரியசாலிகள். தன்னம்பிக்கை கொண்டவர்கள். தந்திரசாலிகள். அன்பானவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி சண்டை சச்சரவு சகஜமாக வரும். நோய் பாதிப்பும் வரும்.


இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் கல்வியும் ஞானமும் கொண்டவர்கள். நீதியும் நேர்மையும் கொண்டவர்கள். தெய்வீக வழிபாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள். விஐபிக்களின் நட்பு தேடி வரும். அறிவுத்திறமையால் அரசாங்க பதவியும் உயர்பதவிகளும் தேடி வரும். வாழும் வரைக்கும் அதிகாரம் அந்தஸ்துடன் ஆரோக்கியமாக ஆயுள் பலத்துடன் இருப்பார்கள்.


இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
மகரம்

மகரம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கைகாரர்கள். கம்பீரமானவர்கள், பிடிவாதக்காரர்கள். தெய்வீக வழிபாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள். எதையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். கணவன் மனைவி இடையே அதிக பிரியம் இருக்கும். மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்வார்கள். செல்வம் செல்வாக்குடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.


இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் கல்வியில் சிறந்தவர்கள். தெய்வீக நம்பிக்கை கொண்டவர்கள். பேச்சினால் பிறரை மயக்கிவிடுவார்கள். நண்பர்கள் அதிகம் கிடைப்பார்கள், வாயால் வசியல் செய்வதில் வல்லவர்கள். நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வார்கள். பிறருக்கு தீங்கு செய்ய மாட்டார்கள். பலத்தோடு இருந்தாலும் மனதளவில் சற்றே பலவீனமானவர்கள்.


இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம் - நீங்க எப்படி ?
மீனம்

மீனம் ராசியில் பிறந்தவர்கள் அழகானவர்கள், ரசிக்க ரசிக்க பேசுவார்கள். மனதோடு பல விசயங்களை வைத்துக்கொள்வார்கள். சில நேரங்களில் பயந்த சுபாவத்தோடு இருப்பார்கள். படிப்பு அதிகம் வராது என்றாலும் புத்திசாலிகள். அழகாய் உடுத்துவார்கள். அழகான வாழ்க்கைத்துணையும் புத்திர  சந்தானங்களும் நிறைந்தவர்கள் 90 ஆண்டுகள் வரை நல்ல ஆரோக்கியம் ஆயுளுடன் வாழ்வார்கள்.Recommend For You

Post Top Ad