முதல்வர் எடப்பாடி சொன்ன நல்ல செய்தி... மகிழ்ச்சியில் மக்கள்! - Asiriyar.Net

Thursday, April 16, 2020

முதல்வர் எடப்பாடி சொன்ன நல்ல செய்தி... மகிழ்ச்சியில் மக்கள்!





தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று நோயாளிகள் இல்லாத நிலை 3 அல்லது 4 நாட்களுக்குள் உருவாகும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 25ஆக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக கூறிய முதல்வர், இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள், நோயாளிகள் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவுக்கு குறைந்து விடும், என்று நம்பிக்கை தெரிவித்தார். இதுவரை 150 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்றும், அடுத்த சில நாட்களில் அனைத்து நோயாளிகளும் குணமடைவார்கள் என அவர் கூறியுள்ளார்.

Post Top Ad