கரோனா வைரஸ் | அரசு ஊழியர்களின் சம்பளங்களிலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு நேரடியாக 'கட் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 20, 2020

கரோனா வைரஸ் | அரசு ஊழியர்களின் சம்பளங்களிலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு நேரடியாக 'கட்





கரோனா வைரஸ் நிவாரணத்துக்காக பிஎம் கேர்ஸ் நிதிக்கு அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளங்களிலிருந்து நன்கொடை அளிப்பது விருப்பத்தின் அடிப்படையில் அல்லாமல் நேரடியாக சம்பளங்களிலிருந்து பிடிக்கப்படுகிறது.

மேலும் நன்கொடை அளிக்க விருப்பமில்லாதவர்கள் எழுத்து மூலம் பதிலளிக்க வேண்டும் என்று அரசு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

வருவாய்த்துறை நோட்டீஸ்:

வெள்ளிக்கிழமையன்று நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறையிலிருந்து அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. நேரடி மறைமுக வரி வாரியத்தில் உள்ள அதிகாரிகளூக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

'மார்ச் 2021ம் வரை ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை பிஎம் கேர்ஸ் நிதிக்கு கொடுக்குமாறு முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எந்த அதிகாரியோ அல்லது ஊழியரோ ஆட்சேபணை தெரிவித்தால் அவர்கள் எழுத்துப் பூர்வமாக டிடிஓவிடம் தங்கள் பதிலை அளிக்கலாம்.' என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகள் ஊழியர்கள் சங்கம் மூலமாக வந்தது தங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்று தெரிவித்தனர். மேலும் ஆட்சேபணைகளை எழுத்து மூலம் கோருவதும் புதிதாக உள்ளது என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இணைச் செயலர் மட்ட அதிகாரி ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, '12 மாதங்களுக்கு ஒருநாள் சம்பலம் என்பது 12 நாள் சம்பளமாகும் இது அவர்கள் மாதச் சம்பளத்தில் 40% ஆகும். இந்திய அரசு ஊழியர்கள் சராசரியாக ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை சம்பளம் வாங்குகின்றனர். அதாவது ஒரு சம்பளம் 3 பேர் அவரை நம்பியிருப்பார்கள் என்பதன்படி. எனவே அவர்களிடம் இந்தக் கோரிக்கை வைப்பது அவர்களுக்கு கொஞ்சம் கடினம்தான்' என்றார்.

இன்னொரு பெயர் கூற விரும்பாத அதிகாரி, 'பிஎம் கேர்ஸ் என்பது நிதி தேவைப்பாடு தொடர்பானதா அல்லது பொது உறவு ஸ்டண்ட்டா?' என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக அரசு மருத்துவமனையின் 4 ரெசிடண்ட் டாக்டர்கள் நேரடியாக தங்கள் சம்பளங்களிலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு பிடித்தம் செய்வதற்கு ஆட்சேபணை தெரிவித்தனர். இது விருப்பத் தெரிவாக இருக்க வேண்டுமே தவிர தானாகவே பிடித்தம் கூடாது என்றனர்.


Post Top Ad