ஆசிரியர்கள் தேவைப்பட்டால் கொரானா பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு! - Asiriyar.Net

Post Top Ad


Sunday, April 26, 2020

ஆசிரியர்கள் தேவைப்பட்டால் கொரானா பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 4 பேர்தான் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியில் தேவைப்பட்டால் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். மேலும் 29-ந் தேதிக்கு பிறகு முதல்-அமைச்சர் மற்றும் உயர்மட்ட குழுவின் ஆலோசனை பெறப்பட்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடத்தப்படும்.


மேலும் நடந்து முடிந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Recommend For You

Post Top Ad