தன்னார்வலராக களமிறங்கிய சி.இ.ஓ ஆசிரியர்கள் வியப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 5, 2020

தன்னார்வலராக களமிறங்கிய சி.இ.ஓ ஆசிரியர்கள் வியப்பு



சேலம் : சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, கொரோனா தடுப்பு தன்னார்வலராக பணிபுரியும் படங்கள், ஆசிரியர்களிடையே வைரலாகி வருகின்றன. 

தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது; பள்ளி, கல்லுாரி களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரிசி அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் நிவாரணம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படுகின்றன.இதற்கான, 'டோக்கன்'வழங்கும் பணி தன்னார்வலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள, அரசு பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலராக பங்கேற்க விருப்பம் கேட்கப்பட்டது. 

அதற்கு, ஆசிரியர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, களத்தில் இறங்கி தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று சேலம் புது பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி சந்தையில், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.இந்த போட்டோ, ஆசிரியர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Post Top Ad