தமிழக அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு திரும்ப உத்தரவு - இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கிறது தமிழகம்.! - Asiriyar.Net

Post Top Ad


Sunday, April 19, 2020

தமிழக அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு திரும்ப உத்தரவு - இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கிறது தமிழகம்.!

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசியத் துறைகள் அல்லாத பிற துறைகளைச் சோந்த அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. ஊழியா்களும் பணிக்கு வரவில்லை. இந்த நிலையில், ஊரடங்குக் காலம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வரும் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் ஊரடங்கில் தளா்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தளா்வுகள் அனைத்தும் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அரசுத் துறைகளைச் சோந்த ஊழியா்களைப் பணிக்கு வர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசுத் துறைகள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்:-

அரசுத் துறைகளின் இன்றியமையாத பணிகளுக்கான அலுவலா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்திட அறிவுறுத்தப்படுகிறது.

கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோா் சுழற்சி முறையில் பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

அலுவலகங்களுக்கு வரும் ஊழியா்கள் அனைவரும் சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து அலுவலா்களும், பணியாளா்களும் முகக்கவசம் அணிந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அடிக்கடி அலுவலகத்தில் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். கொவைட் 19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாது பின்பற்றி பணிபுரிய வேண்டும் என்று அரசுத் துறைகளின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப் பதிவுப் பணி:

ஆவணங்கள் பதிவு செய்யும் பணிகளும் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது. அதேசமயம், ஆவணப் பதிவுக்காக வரும் பொது மக்கள் முகக் கவசத்துடன் வர வேண்டுமென பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களை வெப்பமானி கொண்டு உடல் வெப்பத்தை பரிசோதிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad