பாரம்பரிய மருத்தான கபசுரக் குடிநீரில் நிறைந்துள்ள நன்மைகள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 17, 2020

பாரம்பரிய மருத்தான கபசுரக் குடிநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!




கபசுரக் குடிநீர் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக கருதப்படுகிறது.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், 1. ஆடாதொடை இலை, 2. சிறு தேக்கு, 3. கரிசலாங்கண்ணி, 4. சுக்கு, 5. திப்பிலி, 6. சிறுகாஞ்சேரி வேர், 7. அக்ரகாரம், 8. முள்ளி வேர், 9. கற்பூர வள்ளி இலை, 10. கோஷ்டம், 11. சீந்தில் தண்டு, 12. நிலவேம்பு சமூலம், 13. வட்ட திருப்பி வேர், 14. கோரைக்கிழங்கு, 15. கடுக்காய் தோல் ஆகிய மருத்துவகுணம் கொண்ட பொருட்களை கொண்டு இந்த கபசுரக் குடிநீர் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் இது பொடியாகவும் கிடைக்கும். நிலவேம்பு கஷாயம் செய்வது போலவே கொதிக்கவைத்து சுண்டிய பிறகு வடிகட்டிக் குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு 15 மில்லி லிட்டர் கஷாயத்தில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும். பெரியவர்கள் ஒருவேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். கர்ப்பிணிகள் கபசுரக் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது.

சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலே குறிப்பிட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.


உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும்.


Post Top Ad