ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 22, 2020

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பா?




கொரோனா பாதிப்பு தொடர்பாக வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க தனித்து இருப்பது மட்டுமே சிறந்த வழி என்பதால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல் படுத்தி உள்ளன.

அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஊரடங்கை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அன்றைய தினம் நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். அந்த ஊரடங்கு  ஏப்ரல் 14-ந் தேதியுடன் முடிவடைந்தது.  எனினும், கொரோனா கட்டுக்குள் வராததால், மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நடவடிக்கை எடுத்தார்.

இந்தியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை.  நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது.

இந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆய்வுக் கூட்டமாக இது இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எனினும், ஊரடங்கு  தொடர்பாகவும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிப்பார் என்றே தெரிகிறது.  ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  கடந்த முறை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய போது, 17 மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.


ஏப்ரல் 27-ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஊரடங்கு முடிவடைவதற்கு 3 நாள்களுக்கு முன்னதாக ஏப்ரல் 11-ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.


அப்போது, ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்கள் வலியுறுத்தினர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்புகளை வெளியிட்டன. இதன்பிறகே, மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த நிலையில், ஏப்ரல் 27-ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post Top Ad