நீங்கள் இதுவரை அறிந்திடாத தொழில்நுட்ப இரகசியங்கள் - Asiriyar.Net

Thursday, April 16, 2020

நீங்கள் இதுவரை அறிந்திடாத தொழில்நுட்ப இரகசியங்கள்






இன்றைய தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தை இப்போதே நம் கண்ணில் காட்டுகிறது. தொழில்நுட்பத்தின் அடுத்த நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்து பார்த்தாலே மெய் சிலிர்க்கிறது. 

நீங்கள் அறியாத பல விஷயங்கள் தொழில் நுட்பத்தில் உண்டு. பேஸ்புக்கில் இருக்கும் தவறுகளை கண்டுபிடித்தால் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?? ஆன்டுராய்டின் உண்மையான அர்த்தம் என்னன்னு தெரியுமா???


உலகிலுள்ள பணம் எந்த அளவிற்கு டிஜிட்டல் ஆகி இருக்கிறது என்பதை நீங்கள் யோசித்து பார்த்ததுண்டா?? இதுபோன்று நீங்கள் அறிந்திடாத பத்து முக்கியமான தொழில்நுட்ப ரகசியங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் 

 ★ஃபையர் ஃபாக்ஸ் என்று பெயர் இருந்தால் அதன் லோகோ, ஃபாக்ஸாக தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆச்சரியமாக ஒரு சிவப்பு புசுபுசு பாண்டா தான் ஃபையர் ஃபாக்ஸின் லோகோ என்பது உங்களுக்கு தெரியுமா?

★ஆப்பிள் நிறுவனத்தின் ஒரிஜினலான லோகோ என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? முன்னதாக சர் ஐசாக் நியூட்டன் அவர்கள் ஒரு ஆப்பிள் மரத்திற்கு கீழ் உட்கார்ந்து இருக்க, ஒரு ஆப்பிள் பழம் கீழே விழப் போவதை போன்ற லோகோவை பெற்றிருந்தது. இது 1976 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. அது மட்டுமல்ல அதில் “Newton…A mind forever voyaging through strange seas of thought…alone” என்ற ஒரு வாசகமும் அதில் எழுதப்பட்டு இருந்தது.

★மௌன்டெய்ன் வியூ ஹெட்குவாட்டர்ஸில் உள்ள தோட்டத்தை ஆள் வைத்து பராமரிப்பதற்கு பதிலாக ஆடுகளை மேய விடுகிறது கூகுள் நிறுவனம். ஆடு மேய்ப்பவர் ஒருவர் 200 ஆடுகளை வளாகத்தினுள் கொண்டு வர அதனை ஜென் என்பவர் மேய்ப்பார். ஆச்சரியம் தான் அல்லவா?

★ரோபோட் என்ற பெயர் எதிலிருந்து தோன்றி இருக்கக் கூடும் என யோசிக்கும் போது “ரோபோட்டா” என்ற செக்(Czech) வார்த்தையில் இருந்து தோன்றி இருக்கிறது. கட்டாயப்படுத்தப்படும் வேலை என்பதே அதன் அர்த்தம்.


★உலகில் தோன்றிய முதல் வீடியோ கேமரா ரெக்கார்டர் ஒரு பியானோவின் அளவில் இருந்தது. அது 1956 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த காலத்தில் இப்படி இருந்திருந்தால் வீடியோகிராபர்களின் கதி அதோகதிதான்.


★மார்ச் 1, 1938 ல் மளிகை பொருட்கள் விற்கப்படும் ஒரு இடமாக தான் சாம்சங்கை முதலில் லீ பையூங்-சல் என்பவர் கண்டுபிடித்தார். இதே போல ஸ்டீவ் ஜாப் மற்றும் ஸ்டீவ் வொஸ்நியாக் ஆகிய இருவரும் ஆப்பிள் நிறுவனத்தை ஏப்ரல் 1, 1976 அன்று உருவாக்கினர்.

★ஒரு GB என்பது 1024 MB க்கு சமம் என்பது நமக்கு தெரியும் ஆனால் ஒரு பீட்டாபைட் (PB), 1024 டெராபைட்டிற்கு சமம் என உங்களுக்கு தெரியுமா??? ஒரு PB எந்த அளவிற்கு பெரியது என்று சொல்ல வேண்டுமானால் 13.3 வருடத்திற்கான 

HD டிவியின் வீடியோக்களை பதிவு செய்யும் அளவிற்கு பீட்டாபைட் பெரியது. 50PB ஹார்டு ட்ரைவால் ஆதி காலத்தில் இருந்து எல்லா மொழியிலும் மனிதன் எழுதி வைத்த பதிவுகள் அனைத்தையும் ஸ்டோர் செய்து கொள்ளலாம்.

★இன்டர்நெட் இந்த அளவிற்கு பெரிதாகும் என்பது தெரியாமல் 1995 ஆம் ஆண்டு டொமைன் பெயரை பதிவு செய்வது இலவசமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அதற்கு இரண்டு வருடத்திற்கு 100 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இப்போது. கேட்கவா வேண்டும் . விலை எக்கசக்கமாக ஏறிவிட்டது!! 

★ஐந்து மெகாபைட் டேட்டா என்பது ஒரு டன். 1956 ல் தோன்றிய முதல் கணினியில் ஹார்டு ட்ரைவ் போன்றே ஒரு பொருள் இருந்தது. அதன் எடை மட்டும் 2200 பவுண்டாகவும், 5MB டேட்டாவை ஸ்டோரேஜ் கொண்டதாகவும் இருந்தது. நல்ல வேலை நாம் தப்பிவிட்டோம்.


★ரேடியோவை கண்டுபிடித்ததை விட அதனை மக்களை கேட்க வைப்பது மிக கடினமாக இருந்திருக்கிறது. 50 மில்லியன் மக்கள் ரேடியோ கேட்பதற்கு 38 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. இதே எண்ணை பெறுவதற்கு ஐபாடு வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Post Top Ad