வேலுார் மாவட்டத்திற்கு ஆக., 5 விடுமுறை - Asiriyar.Net

Wednesday, July 24, 2019

வேலுார் மாவட்டத்திற்கு ஆக., 5 விடுமுறை

வேலுார் லோக்சபா தொகுதிக்கு, ஆக., 5ல், பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலுார் லோக்சபா தொகுதியில், ஆக., 5ல் தேர்தல் நடக்க உள்ளது. அன்று காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.அதையொட்டி, அன்றைய தினம், லோக்சபா தொகுதி முழுவதும், பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று, வேலுார் லோக்சா தொகுதியில் உள்ள, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும்.வேலுார் மற்றும் வேலுார் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரியும், வேலுார் லோக்சபா தொகுதி வாக்காளர்களுக்கும், அன்றைய தினம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என, தமிழக அரசின், தலைமை செயலர், சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Post Top Ad