அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையனுடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு - Asiriyar.Net

Monday, February 4, 2019

அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையனுடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு




அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையனுடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு

தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், பிடித்தம் செய்த சம்பளத்தை தர வேண்டும், இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் மதிப்புமிகு சரவணா மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதிப்புமிகு பிரதீப் யாதவ் எல்லாவற்றிற்கும் மேலாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் ஆகியோரை இன்று தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து 21ஆம் தேதி என்ன நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இருந்தனரோ நிலைக்கு கொண்டுவர கோரிக்கை வைத்தனர்



கனிவுடன் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலித்து சாதகமாக முடிவு அறிவிப்பதாக உறுதி அளித்தனர் மேலும் தற்பொழுது நாளை காலை முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு விண்ணப்பம் அளித்து விட்டு வந்ததை அடுத்து ஒருங்கிணைப்பாளர் கூட்டம் தற்போது நடந்து வருகிறது இக்கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாதிப்புகளை சரி செய்வது குறித்தும் ஆலோசனை எடுக்கப்பட்டு வருகிறது

Post Top Ad