3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு - Asiriyar.Net

Tuesday, February 26, 2019

3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு




தூத்துக்குடி மாவட்டம்:

அய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பு பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 9-ம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.



திருநெல்வேலி மாவட்டம்:

“அய்யா வைகுண்டர்” அவதார தினத்தை முன்னிட்டு, அடுத்த மாதம் (மார்ச் மாதம்) 4-ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு, உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக மார்ச் 9- ஆம் தேதி, இரண்டாம் சனிக்கிழமை, வேலை நாளாக இருக்கும் என்றும், மாவட்ட ஆட்சித்தலைவர், அந்த அறிக்கையில், குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம்:

மஹா சிவராத்திரி ஓட்டம் மற்றும் வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆட்சியர் விடுமுறை அளித்தார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 16ம் தேதி வேலை நாளாக அறிவித்தும் குமரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Post Top Ad