5 மற்றும் 8வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - Asiriyar.Net

Saturday, February 9, 2019

5 மற்றும் 8வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!



செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையனிடம், 5 மற்றும் 8வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பயோமெட்ரிக் முறையிலான மாணவர்கள் வருகைப் பதிவேட்டு முறை அரசின் நிதிநிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

மார்ச் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Post Top Ad