புதிய புயல் : கஜா-வை தொடர்ந்து அசுர வேகத்தில் வர இருக்கிறது பேத்தை அதிதீவிர புயல்! - Asiriyar.Net

Friday, December 7, 2018

புதிய புயல் : கஜா-வை தொடர்ந்து அசுர வேகத்தில் வர இருக்கிறது பேத்தை அதிதீவிர புயல்!





ஏற்கனவே தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய கஜா புயலின் சீரமைப்பு பணி இன்னும் முடிவடையாத நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது உருவாகி உள்ளது.



இது மெல்ல மெல்ல தீவிரம் அடைந்து வரும் 15 அல்லது 16-ஆம் தேதி தமிழகத்தின் வட பகுதி அல்லது ஆந்திராவின் தென் பகுதியில் கரையினை கடக்கக்கூடும் என தெரிகிறது.இது தமிழகத்தை நோக்கி நகர்ந்தால் கஜா புயலின் தாக்கத்தால் கடல் வெப்பநிலை குறைவாக இருப்பதால் தீவிரம் குறைந்த புயலாகவும் ஆந்திரா நோக்கி சென்றால் அதி தீவிர புயலாகவும் கரையினை கடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Post Top Ad