கலெக்டர் அதிரடி உத்தரவு - ஆசிரியர்கள் அதிருப்தி - Asiriyar.Net

Thursday, November 8, 2018

கலெக்டர் அதிரடி உத்தரவு - ஆசிரியர்கள் அதிருப்தி


மதுரையில் கலெக்டர் நடராஜனின் அடுத்தடுத்த உத்தரவுகளால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்துள்ளன.நடராஜன் பொறுப்பேற்றது முதல் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் அதிக கவனம் செலுத்துகிறார்.

பொதுத் தேர்வு தேர்ச்சியில் மாவட்ட ரேங்க் முதல் 5 இடங்களுக்குள் வர வேண்டும் என கல்வித்துறைக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்.குறிப்பாக, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு தினம் ஒரு தேர்வு திட்டம் அமல்படுத்தினார். நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை மாற்று கல்வி மாவட்ட ஆசிரியரால் மதிப்பீடு செய்யும் முடிவில் உள்ளார். இதற்கு ஆசிரியரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சங்க ரீதியாக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து வருகின்றனர்.


அவர்கள் கூறியதாவது:கலெக்டர் அறிவுரையை எதிர்க்கவில்லை. சில கிராம பள்ளிகளில் காலை 8:30 மணிக்கு தினமும் தேர்வு நடத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. 'கறார்' நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்வை மாலை அல்லது வாரம் ஒரு நாள் நடத்தலாம். ஒரு கல்வி மாவட்ட விடைத்தாள்களை வேறு ஒரு கல்வி மாவட்ட ஆசிரியர் திருத்துவதில் உடன்பாடு இல்லை. இதுகுறித்து கலெக்டரை சந்தித்து விளக்க உள்ளோம் என்றனர்

Post Top Ad