நான்கு வருடங்களில் இனி உயர்நிலை ஆசிரியர் ஆகலாம்... - Asiriyar.Net

Thursday, November 29, 2018

நான்கு வருடங்களில் இனி உயர்நிலை ஆசிரியர் ஆகலாம்...


உயர்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர் ஆக பி.எட் படிப்பது கட்டாயம். மூன்று ஆண்டுகள் இளங்கலை படிப்பு முடித்த பின்பு இரண்டு ஆண்டுகள் செலவழித்து பி.எட் படிக்க வேண்டிய நிலை தற்பொழுது உள்ளது. இதற்காக 5 ஆண்டுகள் ஒதுக்க வேண்டியுள்ளது. இந்த அதிகப்படியான கால அளவை குறைக்கும் பொருட்டு வரும் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட் படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என மனிதவள மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது.




இதன்படி மூன்று ஆண்டுகள் இளங்கலை படிப்புடன் ஒரு ஆண்டு சேர்த்து பி.எட் படிப்பும் படிக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு ஒரு ஆண்டு மிச்சப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது.

Post Top Ad