வருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் மோடி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 28, 2018

வருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் மோடி





புதுடில்லி:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகத்தை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, வருமான வரி சட்டத்தில், சீர்திருத்தம் செய்ய தயாராகி வருகிறது.
br /> வருகிறது, புதிய, வருமான வரி, சட்டம்,அடுத்த, அதிரடிக்கு, தயாராகிறார், மோடி,
வருகிறது, புதிய, வருமான வரி, சட்டம்,அடுத்த, அதிரடிக்கு, தயாராகிறார், மோடி,
அதன்படி, 1961ம் ஆண்டு, வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய பொருளாதார சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகமாக உள்ளது.இதற்காக, ஏற்கனவே, அரவிந்த் மோடி தலைமையில், செயல் திட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கையை தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தது.
இப்பணி முடிவடையாத நிலையில், கடந்த செப்டம்பரில், அரவிந்த் மோடி ஓய்வு பெற்றார்.
புதிய தலைவர்
இதையடுத்து, மத்திய அரசு, புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை தயாரிக்கும் குழு தொடர்பாக, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்துள்ளது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர், அகிலேஷ் ரஞ்சன், புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப் பட்டு உள்ள செயல் திட்டக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். மற்றபடி, குழு உறுப் பினர்களில் எந்த மாற்றமும்செய்யப்படவில்லை.
செயல் திட்டக் குழு, 57 ஆண்டுகள் பழமையான வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக, புதிய வருமான வரிச் சட்ட வரைவறிக்கை தயாரித்து, 2019, பிப்., 28க்குள், அமைச்சகத்திற்கு வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வரி செலுத்து வோருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில், புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
பயன்கள்
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல நாடுகளில், வருமான வரி விகிதம் குறைவாக உள்ளது. வரி விலக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.இதே கொள்கையை மத்திய அரசு பின்பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வருமான வரிசெலுத்தும் ஏராளமானோர் பயன் பெறுவர். தாமாக முன்வந்து வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தற்போது, தனிநபருக்கான, வருமான வரி விலக்கு வரம்பு, 2.50 லட்சம் ரூபாயாக உள்ளது. இதை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, செயல் திட்டக் குழு பரிசீலிக்கும்.வருமான வரி விகிதம்
, 10 - -30 சதவீதத்தில் இருந்து, 5 - - 20 சதவீத மாக குறைக்கப்படும் என, தெரிகிறது.வெளி நாடுகளை பின்பற்றி, நாட்டின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, சிறந்த வரி நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதலீடு களை ஈர்க்கவும், வேலைவாய்ப்பு களை அதிகரிக்கவும், 'கார்ப்பரேட்' நிறுவனங்க ளுக்கான வரியை குறைத்து, வெற்றி கண்டு உள்ளார். இதே பாணியை, மத்திய அரசு பின் பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.
வரி குறையும்
கார்ப்பரேட் நிறுவனங்கள் வரியை, 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஏற்கனவே, ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கான வரி, 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Post Top Ad