பள்ளி வளாகத்தில் கொசு:- பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Asiriyar.Net

Wednesday, November 14, 2018

பள்ளி வளாகத்தில் கொசு:- பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!


பள்ளி வளாகத்தில் கொசு அதிக அளவில் இருப்பதால்
ஒரு வார காலம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சீனபுரத்தில் உள்ள ரிச்மன்ட் பள்ளிக்கு ஒரு வாரம் காலம் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில், கழிவு நீர் அதிக அளவில் தேங்கி கொசுக்கள் உருவானதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில், பெருந்துறை அடுத்த சீனபுரத்தில் உள்ள ரிச்மன்ட் பள்ளி வளாகத்தில், கழிவு நீர் அதிக அளவில் தேங்கி கொசுக்கள் உருவானதால், மாணவர்களின் நலன் கருதி ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Post Top Ad