6 நோய்களை குணப்படுத்த தினமும் இந்த காய்களை சாப்பிடுங்கள்: நன்மைகள் ஏராளம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 18, 2018

6 நோய்களை குணப்படுத்த தினமும் இந்த காய்களை சாப்பிடுங்கள்: நன்மைகள் ஏராளம்





நம்முடைய வாழ்க்கையில் நவீன வசதிகள் பெருக பெருக உடல் நலத்தை இழந்துவருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்தத் தலைமுறையினர் தான் முப்பது வயதிலிருந்து நாற்பது வயதிற்குள் பலவிதமான நோய்களால் தாக்கப்படுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் சரியான உடல் உழைப்பு இல்லாததும், சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதாகும்.

முருங்கைக்காய்- ஆஸ்துமா

முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் A, C போன்ற சத்துகள் உள்ளது.எனவே இதை தினமும் சமைத்து சாப்பிடும் போது ஏராளமான நோய்கள் குணமடைகின்றன.

முருங்கைக் காய் ஆஸ்துமா சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும். முருங்கைக் காய் போட்டு ஆவி பிடித்தால் சுவாசப் பிரச்னைகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.



எலுமிச்சை- தைராய்டு பிரச்னைகள்

எலுமிச்சைப் பழத்தில் நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகிறது.

தைராய்டு பிரச்னைகள் வராமல் தடுக்க எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.



வெண்டைக்காய்- இரத்த அழுத்தம்

காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காய் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

வெண்டைக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளது. இதில் மிக அதிக அளவில் போலிக் அமிலமும் உள்ளது. வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் அது ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.



புடலங்காய்- தூக்கமின்மை

புடலங்காயில் விட்டமின்கள் A, B, C, மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின், நார்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது.

சிலருக்கு படுத்தவுடன் உறக்கம் வராது. அல்லது ஆழ்ந்த தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள். உணவில் புடலங்காய் சேர்த்து சாப்பிட்டுவந்தால் இத்தகைய உறக்கமின்மை பிரச்னை தீரும். .

சர்க்கரை, இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.



கோவக்காய்- உடல்பருமன்

கோவக்காய் தவிர அதன் இலைகள், பழங்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. கோவக்காய் இலையின் சாறு மார்பு சளியை கரைக்கும் தன்மை கொண்டது. இருமலை குறைக்கும். வயிற்று புண், மூட்டு வலியை குணப்படுத்தும்.

உடம்பில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கவல்லது கோவைக்காய். கோவைக்காயில் இயற்கையாகவே கொழுப்பை வெளியேற்றும் தன்மை இருப்பதால், வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் உடல்பருமன் போன்ற பிரச்சனை நீங்கும்.



பீர்க்கங்காய்- சர்க்கரை வியாதி

பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாகற்காய்க்கு பதிலாக பீர்க்கங்காயை சாப்பிடலாம். பீர்க்கங்காய் இலையிலிருந்து சாறு எடுத்து அதனை சூடாக்கி தினமும் ஒரு டீஸ்பூன் அருந்தி வர சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும்.

Post Top Ad